Bharath book stores
Aarokiyam oru plate by Dr. Arun kumar (tamil book)
Aarokiyam oru plate by Dr. Arun kumar (tamil book)
Couldn't load pickup availability
உணவே மருந்து என்பது எல்லோருக்கும் எல்லா காலத்திலும் பொருந்தும் மறுக்க முடியாத உண்மை. எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்ற எண்ணம் இல்லாமல் வேகமாக நகரும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். தற்போதைய காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத இரத்த கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், பெண்களுக்கான குழந்தையின்மை போன்ற பற்பல வாழ்வியல் நோய்களுக்கும் உணவிற்கும் நேரடி சம்பந்தம் இருக்கின்றது என்பதை நாம் உணர்வதே இல்லை. உணவு முறையில் தொலைத்த ஆரோக்கியத்தை மருந்துகளில் தேடிக் கொண்டிருக்கிறோம். உணவுப் பொருள்களின் தன்மை, அந்த உணவுகள் நம் உடலுக்குத் தரும் நன்மை, தீமை என்பவை பற்றி விளக்கி ஆனந்த விகடனில் வெளியான ஆரோக்கியம் ஒரு பிளேட் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ஒரே வார்த்தையில் நன்மை தீமை என்று பேசாமல், நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப் பொருள்களையும் பகுத்தறிந்து, நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்த சாதக பாதகங்களையும் இந்த நூலாசிரியர் மருத்துவர் அருண்குமார் அவர்கள் சாமானியனுக்கும் புரியும் வகையில் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். உங்கள் உணவுத் தட்டை ஆரோக்கியமாக மாற்றி, ஆனந்தமாக வாழ இந்த நூல் வழிகாட்டுகிறது!
Share

