Vikatan publications
Kaikku ettum thoorathil azahgu by Dr. Rajam Murali (tamil book)
Kaikku ettum thoorathil azahgu by Dr. Rajam Murali (tamil book)
Couldn't load pickup availability
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா? தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் முல்லைச் சிரிப்பும்தான் அழகு என்பதில்லை. `சாதாரணமாக இருந்தாலும், கூந்தல் முதல் பாதம் வரை நம்முடைய உறுப்புகளை ஒழுங்காகப் பராமரித்தாலே அழகாகத் திகழலாம்’ என்கிறார், இயற்கை அழகுக் கலை நிபுணர் ராஜம் முரளி. ஏற்கெனவே, `அழகைப் பராமரித்தல்’ குறித்து இவர் எழுதி, நமது பிரசுரத்தில் வெளிவந்துள்ள நூல்கள், வாசகர்களிடையே, முக்கியமாக பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை. இப்போதும், பல நூறு டிப்ஸ்களை அள்ளி வழங்கி இருக்கிறார். நம் அழகைப் பேணிப் பராமரிக்க உதவும் பொருட்கள் எல்லாம் எங்கேயோ எட்டாத தூரத்தில் இல்லை... எல்லாமே நம் வீட்டில், நாம் அடிக்கடி புழங்கும் பொருட்கள்தான். பால், தயிர், வெந்தயம், எண்ணெய், மருதாணி, கறிவேப்பிலை, மிளகு என்று நம் அடுக்களையில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான அழகு சிகிச்சை செய்துகொள்ளக் கற்றுத் தருகிறார். வெட்டிவேர், ரோஜா இதழ்கள், புங்கங்கொட்டை போன்ற மற்ற சில பொருட்கள் நாட்டுமருந்துக் கடையில் கிடைப்பவையே! தயாரிக்கும் முறையையும் உபயோகிக்கும் விதத்தையும் அதில் கவனிக்கவேண்டிய விஷயங்களையும் எளிமையாக வழங்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த கேள்விகளுக்கு விரிவாக விளக்கங்களைத் தந்திருக்கிறார். அவை, எல்லோருக்குமே பயன் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இனியும் தாமதிக்காமல், உங்கள் கைக்கு எட்டும் தூரத்திலேயே காத்திருக்கும் அழகை, உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு இந்தப் புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். அழகுடன் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகள்!
Share
