Vikatan publications
Manase nee oru mandhira saavi by Suki. Sivam (tamil book)
Manase nee oru mandhira saavi by Suki. Sivam (tamil book)
Couldn't load pickup availability
சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் கொண்ட அன்பர் சுகி.சிவம், 'மனசே, நீ ஒரு மந்திரச் சாவி' என்ற தலைப்பின்கீழ் ஆனந்த விகடனில் எழுதிய தன்னம்பிக்கைத் தொடர் வாசகர்களின் மனதில் மற்றொரு மாணிக்கக் கல்லாக ஒளிவீசுகிறது. தன்னை வளர்த்துக் கொள்ளுதல், நேரத்துடன் செயல்படல், தனிமனித முன்னேற்றம், மனிதன் வாழவேண்டிய விதம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுகி.சிவம், சின்னச் சின்னக் குட்டிக் கதைகள், சம்பவங்கள் மூலமாக வாசகர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளி ஏற்றியிருக்கிறார்.
'மனசே, நீ ஒரு மந்திரச் சாவி' தொடரைப் புத்தகமாக வெளியிடும் இதே சமயத்தில், அவள் விகடனில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாத முடிவு வரையில் நாம் கொண்டாடும் சிறப்புப் பண்டிகைகளைப் பற்றி சுகி.சிவம் ஆன்மீக உணர்வு குறையாமல் இலக்கியத் தரத்தோடு படைத்த 'வழிபாடு' கட்டுரைத் தொகுப்பையும் இணைத்து, ஒரே புத்தகமாகத் தருவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
'மனசே, நீ ஒரு மந்திரச் சாவி', 'வழிபாடு' இணைந்த இந்த அருமையான புத்தகத்தை வாசகர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.
Share
