Vikatan publications
Nalam tharum maruthuva kurippugal by Sakthi Subramani (tamil book)
Nalam tharum maruthuva kurippugal by Sakthi Subramani (tamil book)
Couldn't load pickup availability
இடுப்புச்சதை குறைய வேண்டுமா? அன்னாசிப்பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து, வேகவைத்து வடிகட்டிக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும். தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கிறதா? எலுமிச்சைப் பழத் தோலுடன் சிறிது உப்பு சேர்த்து தேய்த்து வந்தால் பற்கள் வெண்மை நிறம் பெறும்.
தினமும் பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம் மற்றும் கல்லடைப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மணத்தக்காளிக் கீரைச் சாற்றை பால் அல்லது இளநீருடன் சேர்த்துப் பருகி வந்தால், நாள்பட்ட தோல் வியாதிகள் குணமாகும்.
ஓமத்தை லேசாக வறுத்து, அத்துடன் அரை பங்கு உப்பும், அரைக்கால் பங்கு வெல்லமும் சேர்த்து சிறு உருண்டையாகச் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்வு சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும்.
Share
