Vikatan publications
Neeyum Naanum by Gopinath (tamil book)
Neeyum Naanum by Gopinath (tamil book)
Couldn't load pickup availability
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் "நீயும் நானும்' என்ற தலைப்பில் எழுதிய "இளைஞர் 45' தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு. உலகைக் கட்டியாளும் அறிவையும், அதிகாரமும் கொண்ட இந்திய இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டத் தன்னாலான முயற்சிகளைத் தரும் மற்றொரு இளைஞரின் படைப்பு. இதிலுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். தன்னம்பிக்கை, சீரிய பண்புகள், போராட்ட குணம், வெற்றி, சமூக அக்கறை, ஈகோ எனப் பல்வேறு தலைப்புகளில் எளிய, யதார்த்தமான உதாரணங்களுடன் கூடிய இந்நூல், வாழ்க்கையில் முன்னேற விரும்பும் பல கோடி இளைஞர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம். கோபத்தைக் குறை என்று சொல்பவர்கள் மத்தியில் கோபப்படுங்கள் - அது அடுத்தவர் காயத்துக்கான மருந்தாக இருக்கும் வரை என்று சொல்வதுபோல பல உதாரணங்களைத் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்திருக்கிறார் கோபிநாத். படிப்போரின் எண்ண வாயில்களை விசாலமாகத் திறந்து இதயம் வரை சென்று தாக்கும் அம்பு - நீயும் நானும்.
Share
