New century book house
Tamil ilakiya varalaaru by Arunachalam, Raja Varadharaja
Tamil ilakiya varalaaru by Arunachalam, Raja Varadharaja
Couldn't load pickup availability
முன்தோன்றி மூத்த குடி" தமிழ்க்குடி - என்பதற்கேற்பப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழினம்: அவ்வினம் பேசிய மொழி தமிழ்மொழி. ஓர் இனத்தைப் பற்றி எடை போடுவதற்கு அதன் இலக்கியங்கள், இலக்கணங்கள் போதும். தமிழ்மொழி இலக்கிய, இலக்கண வளமுடையது என்பதைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம் மூலம் அறியலாம். இலக்கிய வரலாறுகள் முறையாகப் பதிவு செய்யப்படாத காரணத்தால், தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்ற நூல்களின் காலம், இயற்றிய புலவர்கள் பற்றிய வரலாறுகளை முழுமையாக அறிய முடியவில்லை. அவை கட்டுக் கதைகளாகவும், உண்மைக்குப் புறம்பானவையாகவும் இன்றுவரை உலாவிக் கொண்டிருக்கின்றன. இலக்கிய, இலக்கணங்களைப் பற்றி அறிய இலக்கிய வரலாற்று நூல்கள் எழுதப்பட வேண்டும். அவ்வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் காசு.பிள்ளை எழுதினார். கா.சு.பிள்ளையைத் தொடர்ந்து மு.அருணாசலம், மு.வரதராசன், ஞா.தேவநேயப்பாவாணர், தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் போன்றோர் தமிழ் இலக்கிய வரலாற்று நூலை எழுதியுள்ளனர்..
இந்த வரிசையில் முனைவர் மு. அருணாசலம் மற்றும் முனைவர் மு. ராஜா வரதராஜா அவர்கள் எழுத்தில் உருவான இந்த வரலாறு புத்தகம் மற்றுமொரு பொக்கிஷமாகும்.
Share
